பெங்களூரில் கடும் பனி மூட்டம் : லண்டன், துபாய் விமானங்கள் சென்னையில் தரையிறங்கின!
மீனம்பாக்கம்: பெங்களூர் விமான நிலைய பகுதியில் இன்று காலை கடும் பனி மூட்டம் நிலவியதால் 2 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன. துபாயில் இருந்து 146 பயணிகளுடன் கிங்பிஷர் விமானம், இன்று அதிகாலை 4 மணிக்கு பெங்களூர் வந்தது. விமான நிலைய பகுதியில் கடும் பனி மூட்டம் இருந்ததால் விமானம் தரையிறங்க முடியவில்லை. இதையடுத்து, சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு அந்த விமானம் சென்னையில் தரை இறங்கியது. இதேபோல், லண்டனில் இருந்து பெங்களூர் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமும் சென்னைக்கு திருப்பப்பட்டு, அதிகாலை 5.30 மணிக்கு தரையிறங்கியது. பனி மூட்டம் குறைந்ததும் 2 விமானங்களும் 8 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு சென்றன.