கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே மல்லேஸ்வரத்தில் இயங்கி வரும் மத்திய அரசு நிறுவனமாக பெல் நிறுவனத்தில் இணை மேலாளர், மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. இணை மேலாளர்: 19 இடங்கள் (சிவில்-5, மெக்கானிக்கல்-7, எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்-4, கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேசன் டெக்னாலஜி -3). வயது: 1.10.2011ன்படி 36 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. சம்பந்தப்பட்ட பிரிவில் 9 வருட அனுபவம். 2. மேலாளர்: 10 இடங்கள் (சிவில்-4, மெக்கானிக் கல்-4, எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்-2). வயது: 1.10.2011ன்படி 39 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. சம்பந்தப்பட்ட பிரிவில் 12 வருட பணி அனுபவம். கல்வித்தகுதி: 2 பணிகளுக்கும் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ., இன்ஜினியரிங் பாடத்தில் தேர்ச்சி. எஸ்சி.,எஸ்டியினருக்கு 50 சதவீத தேர்ச்சி போதுமானது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.250 ஐ ஙிபிணிலி, மிஷிநி என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும். ஆன்லைனில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங் களுக்கு www.bhelisg.com ñŸÁ‹ http://careers.bhel.in ஆகிய இணையதளங்களை பார்க்கவும். பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி: The Addl.General Manager (HR), BHEL/Industrial Systems Group, Prof.CNR Rao Circle, IISC (PO), PB.No. 1249, Malleswaram, Bangalore 560 012. ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.9. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: நவ.15.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook