Untitled Document
2011
05
Nov
எண்ணூரில் கடல் அரிப்பை தடுக்க ரூ.3.28 கோடியில் சீரமைப்பு பணி!


திருவொற்றியூர்: எண்ணூர் கடற்கரை பகுதிகளில் கடல் அரிப்பை தடுக்க ரூ.3.28 கோடியில் சீரமைப்பு பணி தொடங்கியது. கடல் சீற்றம் காரணமாக எண்ணூர் பெரிய குப்பம், சின்ன குப்பம், தாழாங்குப்பம் ஆகிய பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டது. கடலோர பகுதியில் வசிக்கும் மீனவர்களின் வீடுகள் இடிந்து விழும் அபாய நிலை இருந்தது. கடல் அரிப்பை தடுக்க பாறாங்கற்கள் போட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதற்கான பணி எண்ணூரில் இன்று காலை தொடங்கியது. பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கம் பணியை துவக்கி வைத்தார். கரையோரம் ஜேசிபி மூலம் பாறாங்கற்கள் கொட்டப்பட்டன. இதுகுறித்து அமைச்சர் கூறும்போது, ÔÔகடல் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ரூ.3.28 கோடியில் 860 மீட்டர் தூரத்துக்கு கடல் அரிப்பால் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் பாறாங்கற்கள் போடப்பட்டு தடுப்பு சுவர் அமைக்கப்பட உள்ளது. 45 நாட்களில் இந்த பணி முடிந்துவிடும்ÕÕ என்றார். எம்எல்ஏ குப்பன், பொதுப்பணித் துறை அதிகாரிகள் ஏமராஜ், பழனியப்பன், பத்மநாபன், கவுன்சிலர் செல்வம், மீனவ கிராம நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,