மம்தா துணிச்சலானவர் : அத்வானி பாராட்டு!
மும்பை: பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதற்கு, மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விலை உயர்வை திரும்ப பெறாவிட்டால் மத்திய அரசில் இருந்து விலக போவதாக மம்தா எச்சரித்துள்ளார். பிரதமரை சந்தித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் நேற்று தெரிவித்தார்.
மம்தாவின் இந்த அதிரடி முடிவுக்கு, அத்வானி பாராட்டு தெரிவித்துள்ளார். அத்வானி நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் ரதயாத்திரை மும்பையின் போரிவாலிக்கு நேற்று வந்தது. இங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய அத்வானி, ‘மம்தாவின் துணிச்சலை பாராட்டுகிறேன். பல விஷயங்களில் எனக்கும், மம்தாவுக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
எனினும் அவரது துணிச்சலை மதிக்கிறேன் என்றார். சிவசேனா செயல் தலைவர் உத்தவ் தாக்ரேவும் மம்தாவை புகழ்ந்துள்ளார். அவர் கூறுகையில், ‘மம்தா பெண்ணாக இருந்தாலும், ஆண் போல வீரமுடன் செயல்படுகிறார். மக்களுக்கு உதவாத அதிகாரம் இருந்து பயனில்லை என்றார்.