நார்வே சர்வதேசப் பட விழாவில், சிறந்த குறும்படத்துக்கான விருது ‘ரத்தப் புரட்சி’ என்ற படத்துக்கு கிடைத்தது. இதன் இயக்குனர் ஸ்டீபனுக்கு சேரன், பிரபுநேபால் ஆகியோர் அந்த விருதை வழங்கினர்.
‘அவன் இவன்‘ படத்தையடுத்து அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார் பாலா. எடிட்டிங் செய்கிறார் ‘ஆடுகளம்‘ கிஷோர்.
பூமிகா தெலுங்கில் தயாரித்துள்ள ‘தகிட தகிட’ படம் தமிழில், ‘துள்ளி எழுந்தது காதல்’ என்ற பெயரில் டப் ஆகிறது. இதில் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா.
சிம்புவுடன் நடித்துள்ள ‘ஒஸ்திÕ, தனுஷுடன் நடித்துள்ள ‘மயக்கம் என்னÕ அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதால் ஹீரோயின் ரிச்சா கங்கோபாத்யாய் குஷியில் இருக்கிறார்.
‘சக்சஸ்‘ படத்தில் நடித்த சிவாஜி பேரன் துஷ்யந்த், அபிராமி திருமண வரவேற்பு சென்னை எம்ஆர்சி அரங்கில் 6ம் தேதி நடக்கிறது.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘3‘ படம் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook