Untitled Document
2011
11
Feb
தமிழ் 3டி படத்துக்கு ஹாலிவுட் கேமரா


‘அம்புலி 3 டி படம் பற்றி டைரக்டர்கள் ஹரிசங்கர், ஹரீஷ் நாராயண் கூறியது: கிராமங்களில் பாட்டி சொன்ன கட்டுக்கதைகள் காலம் காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும். அது உண்மையா? பொய்யா? என்பதே கதை. 1978ம் ஆண் டில் நடப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹீரோவாக வேட்டைக்காரன் வேடத்தில் நடிக்கிறார் பார்த்திபன். மேலும் அஜெய், ஸ்ரீஜித், சனம், திவ்யா  நடிக்கின்றனர். இப்படத்தை 3 டியில் உருவாக்க வேண்டும் என்று இதன் தயாரிப்பாளர் வி.லோகநாதனிடம் சொன்னபோது வித்தியாசமான முயற்சி என்றார். கோவை, மேட்டுப்பாளையம் பகுதியில் இதன் ஷூட்டிங் நடக்கிறது. அப்பகுதியில் உள்ள காட்டுக்குள் 3 டி கேமராவுடன் யதார்த்தமான சண்டை காட்சி களை படமாக்கினோம். அடர்ந்த காட்டுபகுதியே திகிலுட்டும் வகையில் படமாகிறது. வியூ பாயின்ட் என்ற கேமராவில் ‘ஓர் இரவுÕ என்ற படத்தை இயக்கி னோம். அடுத்த முயற்சியும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்பதன் விளைவுதான் அம்புலி படம். இதற்காக அமெரிக்காவிலிருந்து 3 டி கேமரா வரவ ழைக்கப்பட்டு உள்ளது. சாதாரண கேமராவில் ஒரு லென்ஸ் இருக்கும். இந்த கேமராவில் 2 லென்ஸ்கள் உண்டு. ஹாலிவுட்டை சேர்ந்த 3 டி டெக்னிஷியன்  டேன் என்பவரிடம் இதற்காக பயிற்சி பெற்றோம்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


வி ஏ ஒ தேர்வு : ஒரே நபருக்கு 9 பேர் ஹால் டிக்கெட் வந்த விசித்திரம்

தனித்தனியா அனுப்ப நேரம் இல்லாம மொத்தம்