கீழே விழுந்ததில் தலையில் காயம் : மனோரமாவுக்கு ஆபரேஷன்!
சென்னை : நடிகை மனோரமாவுக்கு வரும் செவ்வாய்க்கிழமை தலை பகுதியில் ஆபரேஷன் நடக்கிறது. ரத்தம் உறைந்த இடத்தில் துளை போட்டு அதை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். பழம்பெரும் நடிகை மனோரமா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தவறி விழுந்ததில் தலை மற்றும் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அதை கவனிக்காமல் விட்டுவிட்டார். சமீபத்தில் அவருக்கு தலைவலி, மயக்கம் ஏற்பட்டது. உடனே நந்தனத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதேநேரம் காய்ச்சலால் அவதிப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி அவரது மகன் பூபதி இன்று கூறும்போது, ‘Ôஎனது அம்மாவுக்கு தலையின் பின்பகுதியில் ரத்தம் கட்டி இருப்பதால், அதை ஆபரேஷன் மூலம் சீர்செய்ய உள்ளனர். வரும் செவ்வாய்க்கிழமை இதற்கான ஆபரேஷன் நடக்கிறது. சளியை டியூப் மூலம் நீக்கி வருகின்றனர். ஆபரேஷன் முடிந்த இரண்டொரு நாளில் அவர் வீடு திரும்பலாம் என டாக்டர்கள் கூறி உள்ளனர்ÕÕ என்றார்.