திருவள்ளூரில் தேவர் ஜெயந்தி விழா
திருவள்ளூர் : திருவள்ளூர் வட்டார தேவர் பேரவை மற்றும் நலச்சங்கம் சார்பில் முத்துராமலிங்க தேவரின் 104வது ஜெயந்தி விழா திருவள்ளூர் பஜார் வீதியில் இன்று காலை நடந்தது. பேரவை தலைவர் டி.பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் துரைசாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் வி.பாண்டியன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் கமாண்டோ பாஸ்கர் கலந்து கொண்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கினார். பேரவை சட்ட ஆலோசகர் சுபாஷ் சந்திரபோஸ் பேசினார். திருவள்ளூர் வட்டார பசும்பொன் தேவர் பேரவை சார்பில் திருவள்ளூர் ஈஸ்வரன் கோயில் அருகே நடந்த விழாவில் பேரவை தலைவர் சி.ஏ.கோதண்ட தேவர், செயலாளர் ரவி தேவர் ஆகியோர் வரவேற்றனர். பொருளாளர் தனுஷ்கோடி, அவைத்தலைவர் முருகேசன், கவுரவ தலைவர் சொக்கலிங்கம், துணை செயலாளர் அரவிந்த் முன்னிலை வகித்தனர். நகர மன்ற தலைவர், அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். அர்ஜுனன், மணி, ராஜ்குமார், மாதவன், ரகு, நாகராஜ் மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.