ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரேவுடன் குழுவினர் சந்திப்பு
ராலேகான் சித்தி : பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் அன்னா ஹசாரேவை சந்திக்க, அவரது குழுவை சேர்ந்தவர்கள் அன்னாவின் சொந்த கிராமமான ராலேகான் சித்திக்கு இன்று வந்துள்ளனர். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற குரல் கொடுத்து வருகிறார் அன்னா ஹசாரே. அவரது குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். இந்த பிரச்னைகளுக்கு இடையே நேற்று காஜியாபாத்தில் அன்னா குழுவின் உயர்மட்ட கூட்டம் நடந்தது. சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் ஹசாரே மவுன விரதம் இருந்து வருவதால், கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களை அவரிடம் தெரிவிக்க குழு உறுப்பினர்கள் அரவிந்த் கெஜ்ரிவால், கிரண்பேடி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் இன்று ராலேகான் சித்தி வந்துள்ளனர். அங்கு அவரை சந்தித்து பேசுகிறார்கள். கிரண்பேடி கூறுகையில், ‘Ôஹசாரேவிடம் ஆசீர்வாதம் பெறவும் கூடுதல் புத்துணர்ச்சி பெறவும் இங்கு வந்துள்ளோம்ÕÕ என்றார். தங்கள் மீது குற்றசாட்டுகள் எழுந்த பிறகு முதல் முறையாக இவர்கள் ஹசாரேவை சந்திக்கிறார்கள். இதற்கிடையில், ஹசாரேவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதால், அவர் மவுன விரதத்தை கைவிட வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர்.