ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் 50 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 50 (பொது-26, ஓபிசி-14, எஸ்சி-6, எஸ்டி-4). 1. இன்சூரன்ஸ் (ஜிஎல்ஐ)- 10 இடங்கள் 2. மரைன் இன்ஜினியரிங் (எம்ஆர்இ)-2 3. ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் (ஏவிஇ)-2 4. கெமிக்கல் இன்ஜினியரிங் (சிஎம்இ)-2 5. மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் (எம்இஇ)-2 6. ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் (ஆர்எஸ்டி)-2 7. மெடிக்கல் (எம்இடி)-1 8. மார்க்கெட்டிங் (எம்ஆர்டி)-2 9. என்டர்பிரைசஸ் ரிஸ்க் மேனேஜ் மென்ட் (இஆர்எம்)- 2 10. தகவல் தொழில்நுட்பம் (சாப்ட்வேர்) (ஐடிஎஸ்)-3 11. தகவல் தொழில்நுட்பம் (ஹார்டுவேர்) (ஐடிஎச்)-2 12. நிதி/கணக்கு (எப்ஏசி)- 11 13. மனிதவள விரிவாக்கம் (எச்ஆர்டி)- 3 14. சட்டம் (எல்ஜிஎல்)-3 15. சிவில் இன்ஜினியரிங் (சிவிஇ)-2 16. பப்ளிசிட்டி (பிபிஎல்)-1 கல்வித்தகுதி: வரிசை எண் 1, 2, 3, 4, 5, 10, 11, 15 ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பிஇ/பிடெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரிசை எண் 1,8,9,16 ஆகிய பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரிசை எண் 6க்கு எம்எஸ்சி (புள்ளியியல் /கணிதம்), வரிசை எண் 7க்கு எம்பிபிஎஸ் தகுதியும், வரிசை எண் 12க்கு பிகாம் டிகிரியுடன் சிஏ இன்டர்/எம்காம் படிப்பு களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வரிசை எண் 14க்கு பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் எல்எல்பி/பிஎல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 30.9.2011ன்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. எழுத்துத் தேர்வு,நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: Ï.500ä GENERAL INSURANCE CORPORATION OF INDIA என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் அக்கவுன்ட் பேயி டிடி ஆக எடுக்க வேண்டும். டிராப்டின் பின்புறம் முழுப்பெயரையும், பதிவு எண்ணையும் குறிப்பிட வேண்டும். விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.epostonline.in/GIC என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.5. பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: நவ.14.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook