நூல்இழை போல உள்ள காப்பர் கம்பியை புளோயிங் மெஷினில் மாட்டி சுற்ற வேண்டும். காப்பர் கம்பி ஸ்பிரிங் (முறுக்கு) போல வரும். அதை பிரஸ் மெஷினில் பொருத்தி, ஸ்பிரிங்கில் உள்ள ஒவ்வொரு வளையத்தையும் தனித்தனியாக துண்டாக்கி எடுக்க வேண்டும். வளையத்தின் துளை வழியாக ‘சென்ட்ரிங் நூலிழை கம்பி’யை கொடுத்து கயிறு போல முறுக்கினால் செயின் வரும். அதை இரும்பு பலகையில் வைத்து தேய்த்தால் இறுக்கமடையும்.
பின்னர் அதை தொங்கவிட்டு, ஏற்கனவே கலக்கப்பட்ட வெள்ளி ஈயப் பொடி, பித்தளை பொடி, வெங்கார பொடி கலவையை செயினில் உள்ள இடைவெளிகளில் பிரஷ் மூலம் தடவ வேண்டும். கேஸ் வெல்டிங் செய்வது போல் தீயில் பழுக்க வைத்தால் செயின் முழுமையடையும். பின்னர் அதன்மீது தங்கமுலாம் பூசி, கொக்கி மாட்டினால் கவரிங் தாலி செயின் ரெடி. தேவைப்படும் பொருட்கள் : காப்பர் அல்லது கலாய் கம்பி(ஜிஐ வயரில் உள்ளது), சென்ட்ரிங் கம்பி(சன்னமானது), வெள்ளி ஈய பொடி, பித்தளை மிக்சிங் பொடி , வெங்காரம் பொடி, தங்க முலாம் பூச்சு கலவை. தளவாட பொருட்கள்: வீட்டில் ஒரு சின்ன அறை போதும். புளோயிங் மெஷின் (ரூ.2500), பிரஸ் மெஷின்(ரூ.15 ஆயிரம்.), இரும்பு பலகை (ரூ.1500), கேஸ் சிலிண்டர் இணைப்பு ரூ.5000. டை, டை கத்தி ரூ.2000.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook