உற்பத்தி செய்யப்படும் கவரிங் செயினை கோல்டு கவரிங் கடைக்காரர்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொள்கின்றனர். சாதாரணமாக தாலிக்கயிறு அணியும் பெண்கள்கூட விழாக்களில் பங்கேற்க கவரிங் செயின் அணிகின்றனர். இதனால் பட்டறைக்கே நேரில் வந்து கவரிங் கடைக்காரர்கள் வாங்கிச்செல்கின்றனர். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை சுப காரியங்கள் அதிகளவில் நடைபெறுவதால், இக்காலங்களில் கவரிங் செயின் விற்பனை அதிகம் இருக்கும். அதை கவனத்தில் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பது முக்கியம். சில கவரிங் நகை கடைக்காரர்கள், தங்க கலர் பூச்சு போடாத நிலையில் செயினை வாங்கிக்கொண்டு, தாங்களே தங்கள் விருப்பத்திற்கேற்ற கலவையில் தங்க கலர் பூச்சு (மைக்ரோ கலவை) போட்டுக்கொள்கிறார்கள்.
பயிற்சி
கவரிங் நகை தயாரிப்பில் ஈடுபடுவோர், கம்பி முறுக்கு, கலவை பூச்சு, செயின் இணைப்புக்கு என தனி தனியாக பயிற்சி பெற வேண்டும். அனைத்து வேலைகளையும் 6 மாதங்களில் பழகிக்கொள்ளலாம். முழுமையாக கவரிங் நகை தயாரிப்பில் ஈடுபடாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு ஜாப் ஒர்க் செய்து கொடுத்தும் சம்பாதிக்கலாம்.
முதலீடு
முதலீட்டு செலவு ரூ.26 ஆயிரம். ஒரு மாத உற்பத்தி செலவு ரூ.80,000. மொத்தம் ரூ.1.06 லட்சம் தேவை. செலவு: ஒரு கவரிங் செயின் (24 இஞ்ச்) உற்பத்தி செய்ய பொருட்கள் மற்றும் கூலிச்செலவு உள்பட ரூ.52 செலவாகிறது. ஒரு நாளில் 5 பேர் மூலம் 50 செயின் தயாரிக்கலாம். ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.2,600. 25 நாளில் 1250 செயின் தயாரிக்கலாம். மொத்த உற்பத்தி செலவு ரூ.65,000.
வருவாய்: ஒரு செயின் ரூ.72 வரை விற்பனையாகிறது. மாதவருவாய் ரூ.90,000. லாபம் ரூ.25 ஆயிரம். கிடைக்கும் இடங்கள் : இயந்திரங்களை லேத்களில் ஆர்டர் கொடுத்தால் வடிவமைத்து தருவார்கள். அல்லது ரெடிமேடாக கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. உற்பத்தி பொருட்கள் பெரும்பாலானவை சிறு நகரங்களில்கூட கிடைக்கிறது. சில பொருட்கள் மட்டும் கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பெற வேண்டும்.
பாதுகாப்பானது
செயின் பறிப்பு சம்பவங்கள் அன்றாட நிகழ்வாகி விட்டது. 5 பவுனில் ஒரு செயின் பறிபோனால் ரூ.1 லட்சம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க கவரிங் தாலி செயின்கள் அணியலாம். பறிபோனாலும் அதிகபட்சம் ரூ.500க்கு மேல் இழப்பு வராது. கவரிங் செயின்களை 6 மாதத்திற்கு ஒரு முறை பாலிஷ் போட்டு அணிந்தால், புதுப்பொலிவுடன் தங்கத்தை போல் காட்சியளிக்கும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook