இடைக்கால அரசு அறிவிப்பு கடாபி கொல்லப்பட்ட பின் லிபியா விடுதலை பெற்றது
பெங்காஜி: முன்னாள் அதிபர் கடாபி கொல்லப்பட்ட 3 நாட்களுக்கு பின், லிபியா விடுதலை பெற்றதாக இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
லிபியாவில் கடந்த 42 ஆண்டாக சர்வாதிகார ஆட்சி நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த அதிபர் கடாபியை, கடந்த 20ம் தேதி புரட்சிப் படையினர் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து நாடு விடுதலை பெற்றதாக 3 நாட்களுக்கு பிறகு நேற்று இடைக்கால அரசு அதிகாரிகள் அறிவித்தனர். கடாபியை உயிருடன் பிடித்தும் அவரை அடித்து கொன்றது ஏன் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து ஐ.நா.வும் அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில், லிபிய விடுதலை அறிவிப்பு எப்போதும் வெளியாகும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தனர். அதற்கேற்ப இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ள புரட்சிப் படையினர் நேற்று அறிவித்தனர்.
இதுகுறித்து திரிபோலியில் இடைக்கால மாற்று அரசு கவுன்சில் துணை தலைவர் அப்துல் ஹபிஸ் கோகா கூறுகையில், ÔÔலிபியா விடுவிக்கப்பட்டுள்ளது. லிபிய மக்கள் இனி தலை நிமிர்ந்து செல்லலாம். நீங்கள் சுதந்திரம் அடைந்த மக்கள்ÕÕ என்று அறிவித்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பதிலுக்கு, Ôநீங்கள் சுதந்திர மனிதர்கள்Õ என்று உற்சாகமாக கோஷமிட்டனர்.
லிபிய இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல் உரை நிகழ்த்துகையில், ÔÔலிபிய மக்கள் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். பொது சொத்துக்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். லபியாவின் புதிய சட்டம் இஸ்லாமிய ஷரியத் சட்டத்திட்டத்தின்படி வடிவமைக்கப்படும்ÕÕ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், சுட்டுக் கொல்லப்பட்ட கடாபியின் உடல்,
அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.