மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும்நீரின் அளவும் அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 7025 கனஅடி தண்ணீர் வந்தது. இந்நிலையில், நேற்று மாலையில் வினாடிக்கு 7411 கனஅடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலையில் 7895 அடியாக அதிகரித்தது. டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 8705 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 83.90 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 45.99 டிஎம்சி.