மரத்தில் பைக் மோதி சென்னை வாலிபர் பலி
மரக்காணம் : சென்னை பழவந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் கோகுல்நாத் (23). கடந்த 20ம் தேதி தனது நண்பர்கள் ஜெகன், விக்னேஷ் ஆகியோருடன் புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்துள்ளார். புதுவையில் பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு சென்னை திரும்பினர். மரக்காணம் அருகே ஆச்சிக்காடு என்ற இடத்தில் வந்தபோது, மாடு குறுக்கே வந்துள்ளது. மாட்டின் மீது மோதாமல் இருக்க கோகுல்நாத் சாலையோரமாக பைக்கை திருப்பினார். அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மரத்தில் மோதியது. படுகாயம் அடைந்த கோகுல்நாத் கனகசெட்டிகுளம் பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை இறந்தார்.