சேவாக் மாதிரி அதிரடிக்கு ஆளில்லை : சொல்கிறார் டீன்ஜோன்ஸ்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மாஜி வீரர் டீன்ஜோன்ஸ் அளித்த பேட்டி: தற்போதுள்ள காலக்கட்டங்களில் சேவாக் மாதிரி அதிரடியாக ஆடுவதற்கு ஆளில்லை. கவர் திசையில் விளாசுவதில் சேவாக் வல்லவர். அதேபோல் பந்தை ராக்கெட் வேகத்தில் விளாசுவார். சுழற்பந்து வீச்சில் சச்சினை போன்று யாரும் ரன்குவிக்க முடியாது. வார்ன் எப்படி பந்து வீசினாலும் வெளுத்து வாங்கிவிடுவார். ஷாட் பந்துவீச்சில் விவியன் ரிச்சர்ட்சுக்கு பிறகு சிறப்பாக ஆடுபவர்கள் யாருமே இதுவரை வரவில்லை. கவாஸ்கர் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சிறப்பாக ஆடும் திறமை பெற்றிருந்தார். இவ்வாறு அவர் கூறினார்.