நாடாளுமன்றத்தில் கிளார்க் பணி
நாடாளுமன்ற மக்களவையில் காலியாக உள்ள ஜூனியர் கிளார்க் பணியிடங்களுக்கு டிகிரி படித் தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஜூனியர் கிளார்க்: 22 இடங்கள். சம்பளம்: ரூ.5,200- ரூ.20,200. வயது: 8.11.2011ன்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு வயது வரம்பில் சலுகை உண்டு. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம்/இந்தி தட்டச்சில் நிமிடத்திற்கு குறைந்தது 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஞிளிணிகிசிசி அங்கீகாரம் பெற்ற கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, தட்டச்சு தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப் படையில் விண்ணப்ப தாரர்கள் தேர்ந்தெடுக்கப்ப டுவர். தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் டைப் செய்யும் திறன் உள்ள வர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு எம்ப்ளாய்மென்ட் நியூஸ் அக்.8-14 தேதியிட்ட இதழை பார்க்கவும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: The Joint Recruitment Cell, Room No.521, Parliament House Annexe, New Delhi 110001.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.8.