கடாபியை சுட்டுக் கொன்ற வாலிபர் பரபரப்பு பேட்டி
திரிபோலி: ÔÔலிபிய முன்னாள் அதிபர் கடாபியை சுட்டுக் கொன்றது நான்தான்ÕÕ என்று வாலிபர் ஒருவர் கூறியுள்ளார். லிபிய முன்னாள் அதிபர் கடாபியை எதிர்த்து கடந்த 9 மாதங்களாக புரட்சிப் படையினர் தாக்குதல் நடத்தி வந்தனர். கடந்த 20ம் தேதி சொந்த ஊரான சிர்தேவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ஐ.நா. அறிக்கை கேட்டுள்ளது. இந்நிலையில், கடாபியை சுட்டுக் கொன்றது நான்தான் என்று சனாத் அல்சதக் அல்யுரிபி என்ற வாலிபர் கூறியுள்ளார். இதற்கு ஆதாரமாக இன்டர்நெட்டில் புதிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சனாத்தை சிலர் பேட்டி எடுக்கின்றனர். அவரை சுற்றி சிலர் ராணுவ உடையில் இருக்கின்றனர். சிலர் சனாத்தை பாராட்டுகின்றனர். கடாபியின் தங்க மோதிரம், ரத்தக் கறை படிந்த சட்டையை காட்டுகின்றனர். அந்த தங்க மோதிரத்தில் கடாபியின் 2வது மனைவி சபியாவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பேட்டியின் போது, ÔÔகடாபியை 2 முறை துப்பாக்கியால் சுட்டேன். ஒரு குண்டு அவரது தோளிலும் மற்றொரு குண்டு தலையிலும் பாய்ந்தது. ஆனால், கடாபி உடனடியாக சாகவில்லை. அரை மணி நேரம் கழித்துதான் இறந்தார்ÕÕ என்று சனாத் கூறியுள்ளார்.