Untitled Document
2011
19
Oct
உடல் தகுதி பயிற்சியாளருக்கு உலகம் முழுக்க மவுசு!


இயந்திர மயமாகிவிட்ட இந்த உலகில் உடலை பேணி பராமரிப்பதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. உடலை கட்டுக்கோப்பாகவும், கவர்ச்சியாகவும் வைத்திருக்க ஆண்களும், பெண்களும் விரும்புகின்றனர். மேலும் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்ற உபாதை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். இதனால் நடைப்பயிற்சி உள்ளிட்ட உடற்பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.  மல்டி லெவல் உடற்பயிற்சி நிறுவனங்களும் அதிக அளவில் தொடங்கப்பட்டு வருகின்றன.

இதனால், உடல்தகுதி பயிற்சியானது (Fitness Training) வேக மாக வளர்ந்துவரும் துறையாக உள்ளது. இதோடு  யோகா பயிற்சி யாளர்கள், ஏரோபிக் பயிற்சியாளர் கள் போன்ற உடல் பயிற்சியாளர் போன்றோருக்கும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. உடல்தகுதி பயிற்சியாளர் (Fitness Trainer) என்பவர், உட லின் அதிக எடையைக் குறைத்து, உடற்பயிற்சிகளை செய்ய ஆலோசனை வழங்குவதோடு, ஏரோபிக் பயிற்சிகளையும் வழங்குகிறார். மேலும் உணவுக் கட்டுப்பாடு ஆலோசனை மற்றும் சத்து உணவுகள் பற்றிய பரிந்துரைகளையும் வழங்குகிறார். மேலும், பலவித உடற்பயிற்சி கருவிகள் மற்றும் உடல்தகுதி இயந்திரங்களை பயன்படுத்துவது பற்றிய செய்முறை பயிற்சிகளை யும் அளிக்கிறார்.

உடல்தகுதி பயிற்சியாளராக பணிபுரிய, அத்துறையில் தீவிர  ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது.  அந்த  தொழிலுக்கு ஏற்ற உடலமைப்பு, சக்தி மற்றும் ஆற்றல் ஆகியவை இருக்க வேண்டும். மேலும் தொடர்ச்சியாக பணிபுரிபவராகவும், அத்துறையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும். மேலும், நல்ல தோற்றம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். இவைத்தவிர, மனித உடலியல், உணவுக் கட்டுப்பாடு, சத்துணவு போன்றவற்றைப் பற்றிய போது மான அறிவைக் கொண்டிருக்க வேண்டும்.

உடற்பயிற்சி மையங்கள் (Gym), ஹெல்த் கிளப்கள், எஸ்பிஏ, பெரிய ஹோட்டல்கள், சுற்றுலா தலங்கள், சுற்றுலா கப்பல்கள் ஆகியவை உடல்தகுதி பயிற்சியாளர்களுக்கு வழக்கமான வேலைவாய்ப்பை வழங்கும் இடங்களாகும். மேலும், தனிப்பட்ட பயிற்சியாளராக பணிபுரியும் வாய்ப்புகளும் உள்ளன. அதேசமயம் ஒருவர் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தினால், அவர் தனது திறமைகளையும், பயிற்சி முறைகளையும் வெளிப்படுத்த முடிவதோடு, சுதந்திரமாக பணி யாற்றி அதிக வருமானத்தை பெறலாம்.

பளு தூக்குதல், ஏரோபிக்ஸ், யோகா, கிக்பாக்ஸிங், கராத்தே, ஸ்பின் சைக்ளிங், பைலேட்ஸ் அல்லது டாய்சி போன்ற பல துறைகளில் ஏதேனும் ஒன்றில் சிறப்பு பயிற்சியாளராகலாம். மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலமாகவும் மக்களுக்கு பயிற்சியை வழங்கி பிரபலமாக லாம். தொழில்முறை பயிற்சியாள ராக ஆவதற்கு, Reebok Instructor Certification பயிற்சியில் கலந்துகொண்டு, Reebok Certified Fitness Instructor ஆகலாம். இரண்டரை மாதம் கொண்ட 80 மணி நேர பயிற்சியை, வருடம் 2 முறை Reebok India நடத்துகிறது. சான்றிதழ் பெற்ற பயிற்சியாளராக ஆவதற்கு, A level Master Trainer தேர்வில் தேற வேண்டும்.

இதைப்பற்றிய கூடுதல் விவரங்களை www.reebok.com என்ற இணையதளத்தில் அறியலாம். Sports Authority of India (SAI) தனது பல கிளைகளில், விளையாட்டு தொடர்பாக, பல்வேறு பாடத்திட்டங்களை நடத்துகிறது. வேறு சில முக்கிய கல்வி நிறுவனங்களும் இத்துறை சார்ந்த படிப்புகளை வழங்குகின்றன. அதன் விவரம்:

1. Indira Gandhi Institute of   Physical Education and Sports Sciences,  Delhi.
2. Lakshmibai National   College of Physical Education,  Trivandrum.
3. Sports Authority   of India ,  Patiala.
4. Sports Authority of India , Kolkatta  .

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,