சண்டை காட்சியில் கேமராவை உடைத்த ஹீரோ!
நடிகர் அஜ்மல் கூறியது: ‘கோ' படம் தெலுங்கில் ‘ரங்கம்' என்ற பெயரில் ரிலீஸானது. இதையடுத்து தெலுங்கு படங்களில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. தேர்வு செய்து நடிக்கிறேன். தெலுங்கு மொழியை விரைந்து கற்கத் தொடங்கி இருக்கிறேன். ராம் சரணுடன் ‘ரட்சா' என்ற படத்தில் நடிக்கிறேன். ஓரளவுக்கு தெலுங்கு பேச பழகிவிட்டதால் வசனங்களை புரிந்துகொண்டு நடிக்க முடிகிறது. சமீபத்தில் கோவாவில் இதன் ஷூட்டிங் நடந்தது. ரயிலின் பக்க வாட்டில் டூவிலரில் நானும், ராமும் வேகமாக போவதுபோன்ற காட்சி படமாக்கப்பட்டது.
இந்தியில் ‘தூம், ‘ரேஸ் படங்களுக்கும் ஹாலிவுட் படத்துக்கும் ஸ்டன்ட் காட்சிகள் அமைத்த அலன் அமின் இப்படத்துக்கு ஸ்டன்ட் அமைக்கிறார். காட்சியில் கவனமாக இருந்தோம். திடீரென்று நாங்கள் ஓட்டிய டூவிலர் முன்னே ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த கேமரா மீது மோதியது. இதில் கேமரா கீழே விழுந்து உடைந்தது. எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் எல்லோருமே அதிர்ச்சி அடைந்தோம். நல்லவேளை கேமராமேனுக்கோ எங்க ளுக்கோ காயம் ஏற்படவில்லை.