வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி யூனியன் வங்கியில் 370 காலியிடம் !
மும்பையை தலைமையிட ளமாகக் கொண்டு செயல் பட்டு வரும் யூனியன் வங்கியின் நிர்வாகப் பிரிவில் ஒப்பந்த அடிப் படையில் பணிபுரிய 370 வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி இடங்கள் காலியாக உள்ளன. தகுதியான பட்டதாரி களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
வாடிக்கையாளர் தொடர்பு அதிகாரி (Customer Relationship Executive): 370 இடங்கள் (பொது184, ஓபிசி100, எஸ்சி55, எஸ்டி31). வயது: 4.10.2011ன்படி 21 முதல் 30க்குள்.
தகுதி: அறிவியல் அல்லது வணிகம் உள்ளிட்ட பாடங்களில் 60 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டம் (இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 55 சதவீதம்). மேலும் ஏஐசிடிஇன் அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் மேலாண்மை பாடத்தில் எம்பிஏ/முதுநிலை பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மிஸிஞிகி, கிவிதிமியில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, குழுவிவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். விண் ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.300/ஐ (மற்ற பிரிவினர்கள் ரூ.50 செலுத்தினால் போதும்) யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் ஏதேனும் ஒரு கிளையில் சலானை பூர்த்தி செய்து செலுத்த வேண்டும். இதற்கான சலானை வங்கியின் இணையதள முகவரியில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். நேர்முகத் தேர்வின் போது கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, விண்ணப்பித்ததற்கான ரசீது கொண்டு வர வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு www.unionbankofindia.co.in இணைய தளத்தை பார்க்கவும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.24.