கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த நம்பியூர்பட்டி மணியக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (30). சென்னை சேத்துப்பட்டு கால் சென்டரில் வேலை பார்த்துவந்த ஷியாமளா (23) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். சில தினங்களுக்கு முன்பு இருவரும் மூணாறு சென்றனர். அங்கு லாட்ஜில் ஷியாமளாவை கொலை செய்து விட்டு தப்பிய மகேஷ், சொந்த ஊரில் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்தார். குடும்பத்தினர் மற்றும் போலீசாருக்கு தனித்தனியே அவர் எழுதிய வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
டிவி நடிகர்கள் உள்பட பல வாலிபர்களுடன் ஷியாமளா தொடர்பு வைத்திருந்ததாக அதில் குறிப்பிட்டுள்ள மகேஷ்குமார் அவர்களது செல்போன் எண்கள், முகவரிகளையும் எழுதியுள்ளார். திருவான்மியூர் சந்தோஷ்ராம், கொளத்தூரை சேர்ந்த சுரேஷ்குமார், கார்த்திக், சிவா, ராஜ்மோகன், மதுரையை சேர்ந்த அரவிந்த், டிவி காமெடி ஷோ நடிகர்கள் திருச்சி சரவணன், சங்கர் மற்றும் சென்னை கணேஷ், சரவணா, சற்குணா, சுரேஷ்தான் பிரச்னைக்கு காரணம் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தை தாசில்தாரிடம் இருந்து மூணாறு போலீசார் பெற்று, கொலை வழக்கை தீவிரப்படுத்தியுள்ளனர். கடிதத்தில் மகேஷ் குறிப்பிட்டுள்ளவர்களை கொலை வழக்கில் சேர்க்கவும் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் உள்ளிட்டோர் திடீரென்று தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மகேஷ்குமார் குறி வைத்த 2 பேரின் கதி? தங்கை கணவர் ஈஸ்வரனுக்கு மகேஷ் எழுதிய கடிதத்தில், ‘2 நாள் முன்பே வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தேன். 2 பேரை பழி தீர்க்க வேண்டி இருந்தது. அதனால்தான் லேட்’ என்று எழுதியிருக்கிறார். கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 2 பேர் யார், தற்கொலை செய்யும் முன்பு அவர்களை கொலை செய்தாரா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook