பொழுதுபோக்கு அம்சங்களில் மக்களை வீட்டுக்குள் கட்டுண்டு வைக்கும் ஒரு அங்கமாக சீரியல்கள் உருவெடுத்துள்ளன. இன்று நாடகத்துறையானது வெள்ளித்திரைக்கு இணையாக வளர்ந்துள்ளது. நாடக தயாரிப்பாளர்கள் இத்துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகின்றனர்.
நாடகத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், நாட்டி யக் கலைஞர், விமர்சகர், கதை வசனகர்த்தா, சண் டைப் பயிற்சியாளர், வடிவமைப்புக் கலைஞர், அறிவிப்பாளர், வர்ணனையாளர், உடை அலங்கார நிபுணர், பொழுதுபோக்கு கலைஞர், தொழில்நுட்பக் கலைஞர், நகைச்சுவை கலைஞர், அசோசியேஷன் மேனேஜர், பாக்ஸ் ஆபீஸ் மேனேஜர், ஸ்டேஜ் மேனேஜர், தயாரிப்பு அசிஸ்டென்ட், சவுண்ட் டெக்னீஷியன், டெக்னிக்கல் ரைட்டர், நாடகப் பயிற்சியாளர், டிராமா தெரபிஸ்ட், திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பணிக்குழு, திரைப்படம்/தொலைக்காட்சி/வானொலி தயாரிப்பாளர்கள், நடிப்புத்திறனை விளம்பரப்படுத்துபவர், அலங்காரப் பொருள்களுக்கான நிபுணர், ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனை கலைஞர், உற்சாகமூட்டும் பேச்சாளர் மற்றும் டிஸ்க் ஜாக்கி போன்ற ஏராள மான பணி வாய்ப்புகள் இத் துறையில் குவிந்திருக்கின்றன.
இத்துறை சார்ந்த படிப்பு களை சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கோவை அவினாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகம், வால்டேர் ஆந்திரா பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகம், பெங்களூர் பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம், புனே பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் வழங்கி வருகின்றன.
சுதந்திரமாக சிந்திக்கும் திறன், நன்கு பேசும் மற்றும் கவனிக்கும் திறன், பகுப்பாய்வுத்திறன், ஒழுங்கு மற்றும் தீர்மானம், விமர்சனங்களைத் தாங்கக்கூடிய பொறுமை மற்றும் சகிப்புத்தன்மை, தனியாகவும், குழுவாகவும் இயங்கும் திறன், நெருக்கடியான சூழலில் வெற்றிகரமாக செயல்படும் திறன், மற்றவர்களுடன் எளிதில் கலந்து பழகும் திறன், முனைப்பு மற்றும் புத்தாக்கத் திறன், வெவ்வேறு சூழல்களுக்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளுதல் மற்றும் அடிக்கடி செய்ய வேண்டிய பயணங்களை சலிக்காமல் மேற்கொள்ளும் திறன் ஆகியவை இருந்தால் இத்துறையில் ஜொலிக்கலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook