Untitled Document
2011
07
Oct
பாட்டி உடலுடன் ஒரு வாரம் இருந்த 2 வயது பேத்தி!


பீஜிங்: இறந்து போன பாட்டி உடலுடன் ஒரு வாரம் வாழ்ந்த 2 வயது பெண் குழந்தையை சீனாவில் மீட்டுள்ளனர். தெற்கு மத்திய சீனாவில் உள்ள லோதி நகரம். இங்குள்ள ஷாங்பெங் பகுதியில் வாங் லிச்சன் என்ற வயதான பெண் வசித்து வந்தார். இரண்டு வயதான பேத்தியை லிச்சன் வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி அவர் இறந்து விட்டார். இது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரியவில்லை. இரண்டு வயது பேத்தியும் விவரம் புரியாமல் பாட்டி உடல் மீது படுத்துக் கொண்டு விளையாடினாள்.

ஒரு வாரமாக வாங் லிச்சன் வெளியில் வராமல் இருந்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. மேலும், வீட்டு குழாயில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தது. உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு லிச்சன் இறந்து உடல் அழுகி கிடந்ததும், அங்கு இரண்டு வயது பேத்தி சோர்வாக இருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து மீட்புப் படை அதிகாரிகள் விரைந்து வந்தனர். குழந்தையை மீட்டனர். குழந்தைக்கு தோல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது. உடனடியாக ஹனான் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். இதுகுறித்து குழந்தையின் தந்தை ஜியோ காய்குவான் கூறுகையில், ÔÔஒரு வாரமாக என் தாயை தொடர்பு கொள்ள முடியவில்லை. என் மகள் உயிர் பிழைத்தது அதிசயம் என்றார். இறந்த பாட்டியுடன் ஒருவாரமாக இருந்த குழந்தையை நகரில் உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் அதிசயமாக பார்த்து செல்கின்றனர். அத்துடன் பணம் உள்பட நிறைய பரிசுகளையும் தந்து செல்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,