‘டெர்ரர் பிகர் லேடி ககா’!
வாஷிங்டன்: மனித உரிமை பணிகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் விருந்து நிகழ்ச்சி வாஷிங்டனில் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இதில் ஒபாமா பேசுகையில், ‘‘நிதி திரட்டும் நிகழ்ச்சிக்காக கடந்த வாரம் கலிபோர்னியா போயிருந்தேன். சூப்பர் பாடகி லேடி ககாவை பார்த்தேன். ஏ அப்பா.. எட்டு அடி உயரம்.. 16 இஞ்ச் ஹீல்ஸ் செருப்பு.. ககா டெர்ரர் பிகர்’’ என்று வர்ணித்து கூட்டத்தில் கலகலப்பை ஏற்படுத்தினார்.