Untitled Document
2011
07
Oct
வண்ணாரப்பேட்டையில் கொடூரம் : கழுத்து அறுத்து தாத்தா கொலை!


தண்டையார்பேட்டை: சொத்து பிரித்து தராத ஆத்திரத்தில் தாத்தா கழுத்தை அறுத்து கொலை செய்த பேரன் உள்ளிட்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.  சென்னை வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவை சேர்ந்தவர் வேலு (78). இவரது மனைவி வத்சலா (70). இவர்களுக்கு அரி, சங்கர் ஆகிய மகன்கள், பானுமதி, சரஸ்வதி, சரோஜினி, ரேகா ஆகிய மகள்கள் உள்ளனர். வேலுவுக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. மூத்த மகன் அரி மாற்றுத் திறனாளி என்பதால் வேலைக்கு போகவில்லை. இவரது மனைவி சுமதி. பிரசாந்த், பிரியதர்ஷினி ஆகிய மகன், மகள் உள்ளனர்.

குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாத காரணத்தால் தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு அரி கேட்டுள்ளார். மேல்படிப்புக்கு பணம் இல்லாத காரணத்தாலும் தாத்தா சொத்து தர மறுத்ததாலும் பேத்தி பிரியதர்ஷினியும் கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அரிக்கும், தந்தை வேலுவுக்கும் இடையே விரோதம் அதிகமானது. இந்நிலையில் அரியின் மகன் பிரசாந்த், ஆட்டோ வாங்க தாத்தாவிடம் பணம் கேட்டுள்ளார். Ôசொத்தும் கிடையாது. பணமும் தர மாட்டேன்Õ என்று வேலு கூறியுள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு வேலு சாப்பிட்டு முடித்ததும் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது பிரசாந்த், நண்பர்கள் பெருமாள், ரவி மற்றும் இருவர் வேலுவிடம் தகராறு செய்துள்ளனர். பின்னர் வேலுவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். வேலுவின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். உடனே கொலையாளிகள் தப்பிவிட்டனர். தகவலறிந்த வண்ணாரப்பேட்டை  இன்ஸ்பெக்டர் வீரக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து, வேலுவை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர் முதியவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாய் தூண்டுதல் பேரில் நண்பர்களுடன் சேர்ந்து தாத்தாவை பிரசாந்த் கொலை செய்தது தெரிய வந்தது. சுமதியிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். தலைமறைவாக உள்ள பிரசாந்த் மற்றும் கூட்டாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,

 




Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,