பெண்ணிடம் பலாத்காரம் : வனத்துறை ஊழியர் கைது!
கோவை: பெண்ணிடம் பலாத்காரம் செய்த வனத்துறை ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை போத்தனூர் சிட்கோ பக்கமுள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (51), வனத்துறையில் தற்காலிக காவலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 5ம் தேதி இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு பெண்ணை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காட்டு பகுதிக்கு இழுத்து சென்று செல்வராஜ் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பெண் கொடுத்த புகாரின்பேரில், போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை செல்வராஜை கைது செய்தனர்.