சூதாட்டத்தில் மேலும் 3 பாக். வீரர்கள்!
சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் சல்மான்பட், முகமது அமீர், முகமது ஆசிப் ஆகியோர் மீதான விசாரணை லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது சல்மான்பட்டுக்கும் சூதாட்ட புரோக்கர் மஜீத்துக்கும் இடையே போனில் நடந்த உரையாடல் நீதிபதிக்கு போட்டு காண்பிக்கப்பட்டது.
அதில், சல்மான்பட் குறிப்பிட்ட ஓவரில் ரன் எதும் அடிக்காமல் இருக்க மஜீத்துடன் பேரம் பேசுவது பதிவாகியிருந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் மஜீத்துடன் மேலும் 3 பாக். வீரர்கள் தொடர்பு வைத்திருந்ததும் தெரியவந்தது. விக்கெட் கீப்பர் கமரன் அக்மல், அவரது சகோதரரான அதிரடி வீரர் உமர் அக்மல் மற்றும் வகாப் ரியாஸ் ஆகியோருக்கும் மஜீத்துடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பாக். கிரிக்கெட் வட்டாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.