திருச்சி மாநகராட்சி தேர்தல் : வேட்பு மனுதாக்கல் இன்று நிறைவு!
திருச்சி: ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் 65 கவுன்சிலர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30ம் தேதிதான் தொடங்கியது. தேர்தல் 17ம் தேதி நடக்கிறது. மாநகராட்சி 65 வார்டுகளில் போட்டியிட இதுவரை 196 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்
மேயர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் ஜெயா, மதிமுக வேட்பாளர் ரொகையா பீவி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று மேயர் வேட்பாளர்களான விஜயா ஜெயராஜ் (திமுக), விஜயா சேகர் (காங்), சித்ரா (தேமுதிக), நாகரத்தினம்(புதிய தமிழகம்) ஆகியோர் மனுதாக்கல் செய்கின்றனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (8ம் தேதி) நடக்கிறது.