மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரையிலான மரபணுக்கள் உள்ளன. இந்த மரபணுக்கள்தான் மரபுரீதியான குணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்கின்றன. மரபியலானது உயிரியலின் ஒரு பிரிவாகும். மரபியல் என்பது மரபணுக்கள் பற்றி படிக்கும் அறிவியல் துறையாகும். ஆரம்பகாலத்தில் மரபுப்பண்புகள் தொடர்பாக முன்னோர்கள் பெற்றிருந்த அறிவை விவசாயத்திற்கும், கால் நடைகள் வளர்ப்பிற்கும் பயன்படுத்தி வந்தனர். 19ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் கிரிகோர் மெண்டல் என்பவர் மரபியலின் அடிப்படை அம்சங்கள், உயிரினங்களின் இயல்பு கள் உள்ளிட்டவற்றின் அலகுகளை கண்டறிந்த பின்னரே இத்துறைக்கு மவுசு அதிகரித்தது.
தற்போது இத்துறையின் வளர்ச்சி அபரிமிதமாகி உள்ளது. இத்துறை சார்ந்த படிப்புகளில் குரோமோசோம்களின் அமைப்பு, தாவரங் கள் மற்றும் விலங்குகளின் தோற்றம் உள்ளிட்டவற்றை ஆராயலாம். மேலும் ஆய்வு நிறுவனங்கள், எய்ட்ஸ், புற்று நோய் உள்ளிட்ட கொடிய நோய்களுக்கு மரபியல் உதவியுடன் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன. விலங்குகளில் செல்வர்க்கம் (குளோ னிங்) தொடர்பான ஆய்வுகள் இத்துறையில் நடை பெறுகின்றன. வேலைவாய்ப்புகளும் இத்துறையில் மிகுந்து காணப்படுகின்றன.
இப்படிப்பில் சேரவிரும்புபவர்கள் பிளஸ்-1 மற்றும் பிளஸ் 2ல் அறிவியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண் டும். உயிரியல், தாவரவியல், லைப் சயின்ஸ், விவசாயம், பயோடெக்னாலஜி, மருத்துவம் மற்றும் மைக்ரோ பயாலஜி ஆகியவற்றில் இளநிலை பட்டப் படிப்பு அல்லது ஜெனிடிக் இன்ஜினியரிங், பயோடெக்னாலஜி, பயோகெமிக்கல் இன்ஜினியரிங் இவற்றில் ஒன்றில் பி.டெக்., படிக்க வேண்டும். பட்டமேற்படிப் பில் எம்.எஸ்சி. ஜெனிடிக்ஸ் படிப்பை பல்வேறு நிறுவனங்கள் வழங்குகின்றன.
கல்வி நிறுவனங்கள் விவரம்:
மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், மதுரை (www.mkuniversity.org). எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகம், சென்னை (www.srmuniv.ac.in). ஸ்ரீராமச்சந்திரா பல் கலைக்கழகம், சென்னை (srmc.edu). வி.ஐ.டி., பல்கலைக்கழகம், வேலூர் (www.vit.ac.in). சென்னை பல்கலைக்கழகம், சென்னை (www.unom.ac.in). ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம் (www.andhrauniversity.info) டில்லி பல்கலைக்கழகம், டில்லி (www.du.ac.in). கேரள பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் (www.keralauniversity .edu). இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரு (www.iisc.ernet.in).
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook