பிஇ, சிஏ படித்தவர்களுக்கு 1 வருட பயிற்சியுடன் வேலை !
கேரளமாநிலம் பாலக்காட்டில் இயங்கி வரும் Instrumentation Limited என்ற அரசு நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னியாக பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1.Management Trainee (Technical): தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பிஇ முடித்திருக்க வேண்டும்.
எஸ்சி, எஸ்டியினர் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும். சம்பந்தப்பட்ட பாடத்தில் எம்இ/எம்டெக் முடித்திருப்பது விரும்பத்தக்கது.
2. விணீஸீணீரீமீனீமீஸீt ஜிக்ஷீணீவீஸீமீமீ (தி - கி): தகுதி: சிஏ/ ஐசிடபிள்யூஏ முடித்திருக்க வேண்டும்.
வயது: இரு பணிகளுக்கும் 1.9.2011ன்படி 28க்குள் இருக்க வேண்டும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்தை தபாலில் பெற விரும்புவோர் கோரிக்கை கடிதத்துடன் ரூ.100க்கான டிடி மற்றும் சுயமுகவரியிட்ட ரூ.5க்கான ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவரை இணைத்து அனுப்ப வேண்டும். டிடியை Instrumentation Limi ted என்ற பெயரில் பாலக்காட்டில் மாற்றத்தக்க வகையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு விண்ணப்பம் பெற கட்டணம் கிடையாது. விண்ணப்பத்தை பெற வேண்டிய முகவரி: Senior Personnel Officer, Instrumentation Limited, Kanjikode West, Palakkad 678 623. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப கடைசி நாள்: அக்.10.