என்டிபிசி நிறுவனத்தின் இரும்புத் தொழிற்சாலை (செயில் பவர் கம்பெனி பிரைவேட் லிமிடெட்) ஒரிசா மாநிலம் ரூர்கேலா மற்றும் மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள காலியிடங்களுக்கு தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 34. இதில் துர்காபூரில் உள்ள தொழிற்சாலைக்கு 7 இடங்களும், ரூர்கேலா தொழிற்சாலைக்கு 27 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. துர்காபூர் 1. டிப்ளமோ டிரெய்னீ (ஓ அண்ட் எம்): 2 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு ரெகுலர் டிப்ளமோவில் 70 சதவீத தேர்ச்சி. 2. டெக்னிஷியன் கிரேடு நிலை- 4 (ஒ அண்ட் எம்): 2 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர்/எலக்ட்ரிஷியன்/எலக்ட்ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/ கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய டிரேடுகளில் ஐடிஐ/என்சிடிவிடி /என்சிவிடியில் தேர்ச்சி. 3. அசிஸ்டென்ட் கிரேடு நிலை- 4 (லேப்/கெமிஸ்ட்ரி): 3 காலியிடங் கள். தகுதி: பிஎஸ்சி கெமிஸ்ட்ரி (ரெகுலர்). ரூர்கேலா 1. டிப்ளமோ டிரெய்னீ: ( ஓ அண்ட் எம்): 6 இடங்கள். தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/ இன்ஸ்ட்ருமென்டேஷன்/எலக்ட்ரானிக்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு ரெகுலர் டிப்ளமோவில் 70 சதவீத தேர்ச்சி. 2. டெக்னீஷியன் கிரேடு நிலை- 4 ( ஒ அண்ட் எம்): 10 இடம். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர்/எலக்ட்ரிஷியன்/எலக்ட் ரானிக்ஸ்/ இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக்/ கன்ட்ரோல் அண்ட் இன்ஸ்ட்ருட்மென்டேஷன் ஆகிய டிரேடுகளில் ஐடிஐ/என்சிடிவிடி /என்சிவிடியில் தேர்ச்சி. 3. அசிஸ்டென்ட் கிரேடு நிலை- 4 (லேப்/கெமிஸ்ட்ரி): 4 இடம். தகுதி: பிஎஸ்சி கெமிஸ்ட்ரி (ரெகுலர்). 4. அசிஸ்டென்ட் கிரேடு நிலை- 4 (மெட்டீரியல்ஸ்): 4 இடம். தகுதி: என்சிடிவிடி (ஸ்டோர் கீப்பிங்)/ 3 ஆண்டு டிகிரி (ரெகுலர்) தேர்ச்சி. 5. அசிஸ்டென்ட் கிரேடு நிலை- 4 (எச்.ஆர்.): 2 இடம். தகுதி: 3 ஆண்டுகளுக்கான பட்டப்படிப்பு தேர்ச்சி (ரெகுலர்) மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன். 6. அசிஸ்டென்ட் கிரேடு நிலை- 4 (எப் அண்ட் ஏ): 1 இடம். தகுதி: வணிகவியல் பாடத்தில் ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன். வரிசை எண் 1 தவிர மற்ற அனைத்துப் பணிகளுக்கும் சம்பந்தப்பட்ட துறையில் 4 ஆண்டு பணி அனுபவம் தேவை. வயது: 30.9.2011ம் தேதியின்படி வ.எண் 1ம் பணிக்கு 27 வயதும், வரிசை எண்: 2,4,5, 6 ஆகிய பணி களுக்கு 31 வயதும், வரிசை எண்: 3க்கு 34 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம்: ரூ.200ஐ ழிஷிறிசிலி ஸிஷீuக்ஷீளீமீறீணீ என்ற பெயரில் ரூர்கேலாவில் மாற்றத்தக்க வகையில் A/C Payee DD/Banker @ Cheque ஆக எடுத்து அனுப்ப வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஷ்ஷ்ஷ்.ஸீsஜீநீறீ.நீஷீ.வீஸீ என்ற இணைய தளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.3-9 இதழை பார்க்கவும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: Manager (HR), NTPCSAIL Power Company Private Ltd., Rourkela, CPPII, RSP Complex, Rourkela Dist., Sundergarh. PIN: 769011. விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.30.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook