| |||||
|
2011
25
Sep ![]() கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. சத்தத்தை கேட்டு ஆச்சரியப்பட்ட அனைவரும், கடப்பாரையால் தோண்டியவரின் அருகில் வந்தனர். ‘நிச்சயம் பெரிய புதையலாத்தான் இருக்கும்’ என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர். வியப்பு மேலிட, தோண்டும் பணி விரைந்தது. குழி ஆழமான போது, உள்ளே பெரிய மண்பானை ஒன்று புதைந்து இருந்தது லேசாக தெரிந்தது. வேகவேகமாக கடப்பாரையால் குத்தி தோண்டியபோது, மண்தாழி உடைந்தது. மறுகணமே, ஒரு பெண் ஆவேசம் கொண்டவராய் ஆட ஆரம்பித்தார். அவர் போட்ட கூச்சல் அருகில் இருந்தவர்களை நடுங்க வைத்தது. தலைவிரிக் கோலத்தில் ஆங்காரமாய் ஆடிய பெண்ணை பார்த்து பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
P.T.MURUGAN - TRICHY
9/25/2011 -- 15:58:4 முதுமக்கள் தாழியை கண்டு இப்படி மிரண்டு போகலாமா? ஆவியை கண்டு, அருள் வந்து சாமி ஆடுவதாக சொல்வது நம்ப முடியாதது.கிராமங்களில் மதமதக்கா தாழி என்று சொல்லும் இந்த தாழிகள்,நூறு வயது தாண்டிய ஆட்களை உயிரோடு தாழிக்குள் வைத்து ஜீவ சமாதி செய்து விடுவதாகும்.திராவிட கலாசாரத்தை பறைசாற்றும் இந்த வழக்கம், தமிழ்நாட்டில் பரவி கிடந்தது. உப்பார்பட்டி, டொம்புசேரி(தேனீ) பகுதிகளிலும் நதிக்கரை ஓரங்களிலும் தாழிகள் இன்னும் கிடைத்து வருகின்றன மற்றபடி .சாந்தி கதை என்னவென்று காவல் துறை தான் கண்டுபிடிக்க வேண்டும். mani - pudukai
9/26/2011 -- 15:7:30 ethu ellam summa verum kathai dont feel ashokraj - tiruvannamalai
5/22/2012 -- 14:43:15 இந்த naadu இன்னும் திருந்தவில்லை ..ஆயிரம் பெரியார் வந்தாலும் திருந்த மாட்டார்கள் . kanthaswamy - chennai
6/21/2012 -- 17:25:59 இது நல்ல கதை . kanthaswamy - chennai
6/21/2012 -- 17:30:2 தாளியில் பேய் இவளவு நாளும் தூங்கிச்சா. ஹ ஹ ஹ Umarani - Mnp
11/5/2025 -- 14:56:50 இறுக்கும் வரை என்ஜாய் பண்ணுங்கள்
|
|