கல்லூரி படிப்பை முடித்தவுடன் நல்ல வேலையில் அமர்ந்து விடவேண்டும் ஒவ்வொருவரும் எண்ணுகின்றனர். ஆனால் எல்லோருக்கும் அப்படி அமைந்து விடுவதில்லை. சரியான வழிகாட்டுதல் இருந்தால் எளிதில் நல்ல வேலையை பெறலாம். இன்றைய காலக் கட்டத்தில் அரசு பணிகளில் சேர போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு நகரங்களில் இருகிறது. ஆனால் கிராம இளைஞர்களுக்கு அந்தளவு விழிப்புணர்வு இல்லை. இத்தேர்வுகளில் வெற்றி பெற ஒரு சிறிய கதையைப் பார்க்கலாம். இரண்டு பேர் காட்டில் மரம் வெட்டி பிழைப்பு நடத்தி வந்தனர்.
இருவரும் சமமான நேரம் வேலை பார்த்தாலும் ஒருவனுக்கு அதிக லாபம் கிடைத்தது. எப்படி என்று பார்த்தால், 2-வது நபர் ஓய்வெடுக்கும் சமயத்தில் முதலாவது நபர் தன்னுடைய கோடாரியை கூர்மையாக்கி கொண்டிருந்தான். ஆனால் அதிக மரங்களை வெட்டி பணம் சம்பாதித்தான். இப்படித்தான் போட்டி தேர்வுகளில் எல்லோருமே படிக்கின்றனர். ஆனால் ஒரு சிலபேர் மட்டும் பலர் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் தங்களை கூர்மையாக்கி வெற்றிகனியை பறிக்கின்றனர்.
யுபிஎஸ்சி தேர்வு!
(IAS, IPS, IRS), இந்தியாவின் மிக உயர்ந்த பணிக்கானது. இத்தேர்வில் வெற்றி பெற கடுமையான உழைப்பும் தன்னம்பிக்கை விடாமுயற்சியும் முக்கியமானதாகும். சிஎஸ்ஏடி தேர்வு மாணவர்களின் சிந்தனைத்திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவற்றை அறிய பயன்படுகிறது. தீபம் பயிற்சி நிறுவனத்தில் இலவச ஆலோசனை, கலந்தாய்வு, இலவச மாதிரி வகுப்பு நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 91500 58002 / 78717 58002, 03
டிப்ஸ் கண்ணா டிப்ஸ்
கணிதம், ஆங்கில அறிவு அவசியம்.
பாடங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும்.
முதலாவது தயாரிப்புக்கு 3 மாதங்களும், திருப்பி பார்க்க ஒரு மாதமும் தேவை.
விரைவாக பதில் எழுத பழுகுதல்.
முதல்நிலை தேர்வு முடிந்ததும், முதன்மை தேர்வுக்கு தயாராதல்.
அண்மைக் கால சம்பவங்களை அறிந்து கொள்ளுதல்.
தனியாக படிக்காமல், 4, 5 பேராக சேர்ந்து படித்தல்.
நல்லபயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook