மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வடக்கு ரயில்வே யில் 11 ஆயிரத்து 439 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது டிராக்மேன் (சிவில்)4802, கேட்மேன்160, டிராபிக் போர்ட்டர்277, கேட்மேன் (ஆபரேட்டிங்)438, கலாசி ஹெல்பர்1748, கலாசிஹெல்பர் (பெண்கள்)2480, கலாசிஹெல்பர் (ஸ்டோர்ஸ்)424, சபைவாலா (மெடிக்கல் மற்றும் மெக்கானிக்கல்)137, சபைவாலா பெண்கள் (மெடிக்கல்)25, கேரேஜ் கிளீனர் (மெக்கானிக்கல்)854, டிஎஸ்எல் கிளீனர் (மெக்கானிக்கல்)94.
கல்வித்தகுதி: 1.1.2010ன்படி 10ம் வகுப்பு அல்லது ஐடிஐ அல்லது அதற்கு சமமான தேர்ச்சி. தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
வயது: 1.1.2011ன்படி 18 வயதிலிருந்து 33க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுத் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் உடற்தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.40/ Assistant Personnel Officer (Recruitment), Railway Recruitment Cell, New Delhi என்ற பெயரில் டி.டி எடுக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nr.indianrailways.gov.in இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.2.2011.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook