பெல் நிறுவனத்தில் 180 ஆர்ட்டிசன் பணியிடம்!
ராணிப்பேட்டையில் உள்ள பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 180 ஆர்ட்டிசன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
180 ஆர்ட்டிசன் இடங்களில் பிட்டர்-98, வெல்டர்-56, எலக்ட் ரீஷியன்-6, மெட்டீரியல் ஹேண்ட்லிங் ஆபரேட்டர்-11, இன்ஸ்ட் ருமென்ட் மெக்கானிக்-3, மில் ரைட் மெக்கானிக்-3, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்- 3.
கல்வித்தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் என்டிசி/என்ஏசி படிப்பில் தேர்ச்சி.
விண்ணப்ப கட்டணம்: ரூ.125ஐ (பொது மற்றும் ஓபிசியினருக்கு மட்டும்)BHEL Ranipet PowerJyoti Account No.31170378124 -க்கு சலானை பூர்த்தி செய்து செலுத்த வேண்டும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு artrect.bhelrpt.co.in என்ற இணையதளம் அல்லது எம்ப்ளாய்மென்ட் நியூஸ் செப்.10-16 தேதியிட்ட இதழைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.26.