நவி மும்பையில் செயல் படும் ‘தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கேபிடல் மார்க்கெட்‘ கல்வி நிறுவனம் பைனான்சியல் இன்ஜினியரிங் அண்டு ரிஸ்க் மேனேஜ்மென்ட் படிப்பில் 6 மாத சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. வங்கிகள், மியூச்சுவல் பண்ட், நிதி நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், ஈக்விட்டி ஆராய்ச்சி நிறுவனங்கள், இடைத் தரகு நிறுவனங்கள், பிற நிதி சேவை வழங்கும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிதி தொடர்பான தொழில்நுட்பங்கள், செயல்முறைகள், செய்முறைப் பயிற்சி போன்றவற்றை பற்றி இப்படிப்பில் கற்றுத் தரப்படுகிறது.
குவான்டிடேட்டிவ் டெக் னிக்ஸ், ஈக்விட்டி வேல்யூ வேஷன் அண்ட் பிரைசிங், டெரிவேட்டிவ்ஸ் வேல்யூ வேஷன் அண்ட் பிரைசிங், போர்ட்போலியோ மேனேஜ் மென்ட், பிக்சட் இன் கம் செக்யூரிட்டீஸ் அனலைசிஸ், கிரடிட் ரிஸ்க் மாடலிங் அண்டு எக்னாமெட்ரிக் பேக்கேஜ் போன்ற பாடத்திட்டங்கள் இப்படிப்பில் உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள நிதி குறித்த பிரச்னைகளை ஆராயவும், அவற்றை கையா ளும் வழிமுறைகளும் இதில் கற்றுத்தரப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து, இது தொடர்பான துறையில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள் படிக்கலாம்.
இதுதவிர, ஐதராபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிஸ்க் மேனேஜ்மென்ட் (ஐஐஆர்எம்), இத்துறையில் ஒரு ஆண்டு முதுகலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. இன்ஜினியரிங் உள்பட ஏதேனும் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்தவர்கள் இப்படிப்பை தேர்வு செய்யலாம். இதில் உள்ள பாடத்திட்டங்கள் லண்டனில் செயல்படும் சார்ட்டட் இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்டை (சிஐஐ) அடிப்படையாக கொண்டவை. இந்தியாவில் காப்பீடுகள் ஒழுங்கு முறை சம்பந்தமான 4 படிப்புகளும் இதில் உள்ளன. இப்படிப்பு ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, ரிஸ்க் மேனேஜ்மென்ட் என மூன்று வகையாக உள்ளது.
இதில் தொழில்நுட்பத் திறன்களும், போட்டித் திறன்களும் கற்றுத்தரப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் இன்சூரன்ஸ் துறையில் உயர்பதவிகளுக்கு செல்லலாம். டெக்னிக்கல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவாக பணியாற்றலாம். மார்க்கெட்டிங் துறைகளிலும் ஜொலிக்கலாம். இதற்கான கட்டணம் ஐஐசிஎம்-ல் ரூ.55 ஆயிரம். ஐஐஆர்எம்-ல் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம். இப்படிப்பை முடித்தவர்கள் தொடக்கநிலையில் ஆண்டுக்கு ரூ.5.5 லட்சம் முதல் ரூ.14 லட்சம் வரை சம்பளம் பெறலாம்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook