கலை மற்றும் ஊடகத்துறையில் ஆடியோ இன்ஜினியரிங் படிப்புக்கு முக்கிய பங்குண்டு. ஆடியோ இன்ஜினியரிங் என்பது ஒலிப்பதிவு, மிக்சிங் மற்றும் ஒலியை உருவாக்குதலுக்கு பயன்படும் கருவிகள் மற்றும் ரெக்கார்டிங் சாதனங்களை திறம்பட பயன்படுத்துவது, அனலாக் டேப், டிஜிட்டல் மல்டி டிராக் ரெக்கார்டர்ஸ், வொர்க் ஸ்டேஷன்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் உதவியுடன் ரெக்கார்டிங் பணிகளை மேற்கொள்வது குறித்து கற்றுத்தரும் துறையாகும். எலக்ட்ரானிக்ஸ், ஒலியியல், மனநலம் சார்ந்த ஒலி யியல் மற்றும் இசை உள்ளிட்டவை குறித்தும் படிக்கலாம்.
டிவி மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகள், இசைக்கச்சேரிகள், திரைப்பட இசைப்பதிவு உள்ளிட்ட ஒலி தொடர்புடைய இடங்கள் அனைத்திலும் ஆடியோ இன்ஜினியர்கள் தேவை இன்றியமையாததாக உள்ளது. ஆடியோ உபகரணங்கள் உதவியுடன், ஒலியை பதிவு செய்து, திருத்தம் செய்து, தேவைப்படும் இடங்களில் மிக்ஸ் செய்து ஆடியோவை துல்லியமாக தேவைப்படும் விதத்தில் கலவையாக தருவது ஆடியோ இன்ஜினியர்கள் தான்.
வேலைவாய்ப்பு மிகுந்த இத்துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்டுடியோ, பிலிம் ஸ்டுடியோ, மல்டிமீடியா நிறுவனங்கள், போஸ்ட் புரொடக்ஷன் யூனிட் உள்ளிட்ட இடங்களில் பணியில் அமரலாம். ஆடியோகிராபி, சவுண்ட் ரெக்கார்டிங், மிக்ஸிங் ஸ்பெஷலிஸ்ட் என இத்துறை சார்ந்த சிறப்புப் படிப்புகள் பல்வேறு நிறுவனங்களால் கற்றுத்தரப்படுகின்றன. இவற்றை முடித்தால் உங்கள் தகுதி அதிகரிப்பதோடு, கணிசமான மாத ஊதியத்தில் பணியாற்றவும் வாய்ப்பு கிடைக்கும்.
இத்துறை சார்ந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
* எஸ்ஏஇ (ஸ்கூல் ஆப் ஆடியோ இன்ஜினியரிங்), சென்னை. * எஸ்ஏஇ (ஸ்கூல் ஆப் ஆடியோ இன்ஜினியரிங்), பெங்களூர். * ஆடியோபைல் இன்ஸ்டிடியூட் ஆப் சவுண்ட் இன்ஜினியரிங், கொச்சி. * டெல்லி திரைப்படக் கல்லூரி, புதுடெல்லி. * எப்டிஐஐ (பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா), புனே. * சத்யஜித் ரே பிலிம் மற்றும் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட், கொல்கத்தா. * பிரிட்ஜ் அகடமி, சென்னை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook