இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள ஆபீசர்ஸ் கிரேடு பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. மொத்த இடங்கள்: 75 (பொது-38, எஸ்சி-10, எஸ்டி -9, ஓபிசி-18). வயது: 1.9.2025 அன்று 21 லிருந்து 30க்குள். எம்.பில் முடித்த வர்கள் 31 வயது வரையிலும், பி.எச்.டி., முடித்தவர் கள் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு பிரிவின ருக்கு வயதுவரம்பில் சலுகை உண்டு. கல்வித்தகுதி: 60 சதவீத தேர்ச்சி யுடன் ஏதேனும் ஒரு பட்டம் அல்லது 55 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் அலல்து 50 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் பெற்ற பின் பி.எச்டி முடித்திருக்க வேண்டும் அல்லது பட்டப் படிப்பு முடித்தபின் சிஏ/சிஎஸ் முடித்திருக்க வேண் டும் அல்லது பட்டப்படிப்பு முடித்தபின் மேலாண் மையில் முது நிலை டிப்ள மோ/எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
எஸ்சி. எஸ்டியினர் மற் றும் மாற்றுத் திறனாளிகள் பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், முது நிலை படிப்பில் தேர்ச்சியும் பெற்றிருந்தால் போதும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, பெங்களூர், கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும். விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதனை Bank Of India என்ற பெயரில் மும்பையில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு http://onlinedr.rbi.org.in இணையதளத்தை பார்க்கவும். தபாலில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: The General Manager, Reserve Bank Of India Services Board, Post Bag.No.14501, Mumbai Central Post Office, Mumbai- 400 008.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.26.
தபாலில் அனுப்ப கடைசி நாள்: அக்.3.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook