பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அசிஸ்டென்ட் இன்ஜினியர் (குருப்-1): 36 இடங்கள். சம்பளம்:ரூ.12,600-32,500. தகுதி: மெக்கானிக்கல்/ புரொடக்ஷன்/ மெட்டாலர்ஜி, எலக்ட்ரிக்கல்/சிவில்/கம்ப்யூட்டர் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் 60 சதவீத தேர்ச்சியுடன் பி.இ., பட்டம். எஸ்சி.,எஸ்டியினர் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
வயது:1.9.2011ன்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.400/- இதனை Hindustan Aeronautics Limited, Koraput Division என்ற பெயரில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா Sunabeda-2,Code.No.1304ல் மாற்றத்தக்க வகையில் கிராஸ் செய்யப்பட்ட டிடி எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பதாரர்கள் www.hal.india.com/carerer என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பிரின்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி: Post Box No:30, General Post Office (GPO), Hyderabad- 500 001.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்.24.
பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: அக்.1.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook