Untitled Document
2011
17
Jul
தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன்கள் கைது

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


ஊத்துக்கோட்டை: நிலத்தகராறில் தொழிலாளியை தாக்கிய தந்தை, மகன்களை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டையை அடுத்த பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சிவன் (42). கார்பென்டர். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சண்முகம் (70). இருவருக்கும் நிலத்தகராறு உள்ளது. முன்விரோதத்தில் சிவன் கட்டியிருந்த சுவரின் மேல் உள்ள ஓடுகளை சண்முகம் நேற்று உடைத்துள்ளார். இதை சிவன் தட்டி கேட்டார். இதனால் வாக்குவாதம் முற்றியது. சண்முகத்துக்கு ஆதரவாக, அவரது மகன்கள் செல்வம் (37), பாஸ்கர் (32) ஆகியோர் சிவனை இரும்பு கம்பியால் மர்ம உறுப்பில் தாக்கியுள்ளனர். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
புகாரின் பேரில் ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிவனை தாக்கிய சண்முகம், மகன்கள் செல்வம், பாஸ்கர் ஆகியோரை போலீசார் கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper  |     |   tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபிரதி எடுக்க  
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 




Follow Me

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,