4 டெஸ்ட்டிலும் சேவாக் அவுட்?
இந்திய அணியின் அதிரடிவீரர் சேவாக் தோள்பட்டை வலிக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக 21ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட்டில் பங்கேற்கமாட்டார் என முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது 2வது டெஸ்ட்டிலும் அவர் பங்கேற்கமாட்டார் என டோனியும், பயிற்சியாளர் பிளட்சரும் அதிரடியாக கூறியுள்ளனர்.
இந்நிலையில் சேவாக் டெஸ்ட் தொடர் முழுவதும் பங்கேற்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருடைய காயம் மெதுவாகவே ஆறி வருகிறது. முழு உடல் தகுதியை பெறாத நிலையில் மீண்டும் அவரை ஆட வைத்து ரிஸ்க் எடுக்க அணி நிர்வாகம் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
அனேகமாக சேவாக் ஒருநாள் போட்டி தொடரிலேயே களமிறக்கப்படுவார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்தன. ஒருநாள் போட்டி செப்டம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. அதற்கு இன்னும் ஏறக்குறைய ஒன்றரை மாதகால இடைவெளி உள்ளதால் அதற்குள் சேவாக் உடற்தகுதியை எட்டிவிடுவார்.