திருவள்ளூர், -குழந்தைகளை தவிக்க விட்டு மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடுகின்றனர்.திருவள்ளூர் அடுத்த கிளாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் விவேக் (28). இவரது மனைவி தீபா (23). இவர்களுக்கு 3 வயதில் மகள், ஒரு வயதில் மகன் உள்ளனர். இந்நிலையில் தீபா, தனது இரு குழந்தைகளையும் மாமியாரிடம் விட்டுவிட்டு கடந்த 9ம் தேதி, காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வழக்கம் போல வேலைக்கு சென்றார். அதற்கு பிறகு, மாலையில் வீடு திரும்பவில்லை. பல இடங்களிலும், தொழிற்சாலை மற்றும் உறவினர்கள் வீடுகளுக்கு சென்று தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து விவேக் கொடுத்த புகாரின் பேரில், செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து, தீபாவை யாராவது கடத்தி சென்றனரா, வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.