தமிழுக்கு வரும் பாலிவுட் ஹீரோயின்
பிரியதர்ஷன், ஷாஜி கைலாஷ், வினயன் வரிசையில்மலையாளத்திலிருந்து தமிழ் படம் இயக்க வருகிறார் கோபாலன் மனோஜ். (இவர் மலையாளத்தில் ‘சாரதி’ என்ற படம் இயக்கியவர்) தமிழில் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நகுல் ஹீரோ. ஜோடியாக ஆஞ்சல் நடிக்கிறார். இவர் இந்தியில் அமிதாப்பச்சனுடன் ஆரக்ஷான், சன்னி தியோலுடன் ‘காயல் ஒன்ஸ் அகெய்ன்’, கரண் ஜோஹரின் ‘வி ஆர் பேமலி’ படங்களில் நடித்தவர். சதீஷ் குரூப் ஒளிப்பதிவு. நிதின்லோபஸ் இசை. சென்னை, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவில் படப்பிடிப்பு நடப்பதுடன் இலங்கை, மொரிஷியஸ் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. பியான்ட் ஐ என்டர்டெயின்மென்ட், ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன் தயாரிக்கிறது.