தமிழுக்கு வரும் மற்றொரு டோலிவுட் ஹீரோ
50களில் சென்னை, மும்பையில் தமிழ், தெலுங்கு படப்பிடிப்புகள் நடந்தது. என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ரங்காராவ், காந்தாராவ் என டோலிவுட் நடிகர்கள் தமிழ் படங்களில் நடித்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி வரவுக்கு பிறகு சென்னையிலிருந்து படப்பிடிப்பு நடக்கும் பல ஸ்டுடியோக்கள் ஆந்திராவுக்கு மாறியதையடுத்து டோலிவுட் ஹீரோக்கள் ஆந்திரா சென்று அங்கேயே தங்கி நடிக்கத் தொடங்கினர். இதனால் டோலிவுட் ஹீரோக்கள் தமிழில் நடிப்பது குறைந்தது. மீண்டும் தற்போது பழைய நிலை உருவாகி வருகிறது.
ராம் சரண் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யப்படுகிறது. நாகார்ஜுனா ‘தோழா’ என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் உருவாகிறது.இவர்களைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் தமிழுக்கு வருகிறார். ‘ருத்ரம்மாதேவி’ உள்ளிட்ட ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவர் லிங்குசாமி இயக்கும் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.