‘காதலனுடன் பிரேக் அப் செய்’ அக்ஷராவுக்கு மம்மி அட்வைஸ்
ஊருக்கு தெரியும்வரை டேட்டிங் செய்யும் நட்சத்திர ஜோடிகள் அதுவே ஊர் அறிந்த ரகசியமானபிறகு மறுப்பதும் அல்லது பிரேக் அப் செய்வதும் திரையுலகில் சகஜமாகி வருகிறது. கமல்ஹாசனின் 2வது மகள் அக்ஷரா நடிக்க வருவதற்கு முன்பிருந்து மாஜி ஹீரோயின் ரதி (புதியவார்ப்புகள் நடிகை) மகன் தனுஜ் உடன் டேட்டிங் செய்துவந்தார். தற்போது இருவருமே நடிக்க வந்துவிட்டார்கள். ‘ஷமிதாப்’ படம் மூலம் இந்தி படத்தில் அறிமுகமானார் அக்ஷரா. இப்படம் ஹிட்டாக அமையாததால் அக்ஷராவுக்கு புதிய வாய்ப்பு வரவில்லை.
வந்த சில வாய்ப்பும் பேச்சுவார்த்தையோடு நின்றுவிட்டது. அதேபோல் தனுஜ் நடித்த ‘லவ் யு சானியோ’ படமும் தோல்வியை தழுவியது. அக்ஷரா, தனுஜ் டேட்டிங் விஷயத்தில் ஆர்வம் காட்டுவதே நடிப்பில் அவர்கள் தோல்வி அடைவதற்கு காரணம் என அவர்களின் அம்மாக்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர்களது அம்மாக்கள் சரிகா, ரதி இருவரையும் அழைத்து, ‘பிரேக் அப் செய்துகொண்டு நடிப்பில் கவனம் செலுத்துங்கள், மற்றவற்றை பிறகு பார்க்கலாம்’ என அட்வைஸ் செய்தார்களாம். அதை ஏற்று இருவரும் சமீபத்தில் பிரேக் அப் செய்துகொண்டனர்.