Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
04
Mar
பல்லாவரம் அருகே முட்புதரில் முகம் சிதைந்த வாலிபர் சடலம்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

தாம்பரம்: சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர், அடையாறு ஆற்றை ஒட்டிய மகிழம் நகரில் காலியாக உள்ள முட்புதர் பகுதியில் இன்று காலை 35  வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் பிணம் முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. அவர் லுங்கியும் கிழிந்த நிலையில் மேல்சட்டையும் அணிந்திருந்தார்.அவரது உடலுக்கு அருகே ஒரு பாறாங்கல்லும் கிடந்தது. இதைப் பார்த்ததும் அப்பகுதி மக்கள் இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு அந்த வாலிபரின் சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக  குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அவரை  கல்லால் அடித்து கொன்றார்களா அல்லது ஏதேனும் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement