Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2016
02
Mar
ஒரே படத்துக்கு 2 விழா தமன்னா எஸ்கேப்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா நடிக்கும் படம் ‘தோழா’. வம்சி இயக்குகிறார். கோபி சுந்தர் இசை. இப்படம் தெலுங்கில் ‘ஊபிரி’ பெயரில் ஒரே நேரத்தில் தயாராகிறது. சமீபத்தில் ‘தோழா’ பட ஆடியோ ரிலீஸ் சென்னையில் நடந்தது. நாகார்ஜூனா, கார்த்தியுடன் தமன்னா பங்கேற்றார். தமன்னா கவர்ச்சி உடையில் தோன்றி அசத்தியதுடன் கலகலப்பாக பேசி கவர்ந்தார். நேற்று ‘ஊபிரி’ ஆடியோ ரிலீஸ் ஐதராபாத்தில் நடந்தது. நாகார்ஜூனா, கார்த்தி பங்கேற்றனர். தமன்னா பங்கேற்கவில்லை. இதனால் சலசலப்பு ஏற்பட்டது. பட குழுவுக்கும், தமன்னாவுக்கும் கருத்துவேறுபாடால் அவர் புறக்கணித்துவிட்டதாக முணுமுணுத்தனர். விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா தமிழில் ‘தர்மதுரை’ படத்தில் நடித்து வருகிறார். அதன் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டி இருந்ததால் தமன்னா ஆடியோ விழாவுக்கு வரமுடியவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி தமன்னா அளித்துள்ள விளக்கத்தில்’ஊபிரி நிகழ்ச்சியை நான் தவறவிடுகிறேன். இதன் பாடல்கள் ரசிகர்களின் இதயத்தை தொடும். ஒவ்வொரு நாள் படப்பிடிப்பையும் நான் முழுமையாக ரசித்தேன். ஆடியோ ரிலீஸில் நேரடியாக என்னால் பங்கேற்க முடியவில்லை. என் ஆத்மா அங்கு இருக்கும். குழுவினருக்கு எனது அன்பும், பாராட்டும்’ என தெரிவித்திருக்கிறார்.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement