வில்லன் ஆக மாட்டேன் மாதவன் கறார்
அலைபாயுதே தொடங்கி ஹீரோவாக எல்லா படங்களிலும் நடித்துள்ளார் மாதவன். அன்பே சிவம், மன்மத அம்பு படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது கமல் நடிக்கும் புதிய படம் தூங்காவனம். இதன் படப்பிடிப்பு வேகமாக நடக்கிறது. திரிஷா ஹீரோயின். ஆஷா சரத், பிரகாஷ்ராஜ், யூகிசேது என பலர் நடிக்கின்றனர். இதில் கமலுக்கு வில்லனாக மாதவன் நடிக்க உள்ளதாக இணைய தளங்களில் தகவல் பரவியது. இதையறிந்து ஷாக் ஆன மாதவன். அவர் இணைய தள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில்,’கமல்ஹாசனின் தூங்காவனம் படத்தில் வில்லன் உள்பட எந்த வேடத்திலும் நான் நடிக்கவில்லை. இது வெறும் வதந்திதான்’ என்றார். சில படங்களில் நெகடிவ் வேடங்களில் நடித்திருந்தாலும் வில்லன் வேடத்தில் நடிக்க கேட்டு வந்த வாய்ப்புகளை ஏற்கனவே மாதவன் கறாராக மறுத்துவிட்டாராம்.