விஞ்ஞான உலகின் அபரிமித மான வளர்ச்சியால் மனித இனத்துக்கு பல்வேறு கண்டு பிடிப்புகள் வரப்பிரசாதமாக கிடைத்துள்ளன. அவற்றுள் மின்சாரமும் ஒன்று. ஈடுசெய்ய முடியாத பொக்கிஷம் போல மனித இனத்துக்கு பயன்பட்டு வருகிறது. அடுத்ததாக தொலைதொடர்பு வசதிகள். மனிதர்களின் வாழ்க்கை யில் ஓர் அங்கமாக மாறிவிட்டன.தரைவழி தொலைபேசி என்பதே அரிதான ஒன்றாக இருந்த நிலை மாறி, செல்போன் அனைவரது கையிலும் புழங்கி வருகிறது. அந்தளவு தொலைதொடர்பு துறையின் வளர்ச்சி உள்ளது. போட்டி போட்டுக்கொண்டு தொலைதொடர்பு நிறுவனங்களும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி வருவதால், அதற்கேற்ப இத்துறை யில் வேலை வாய்ப்புகளும் பெருகி வருகிறது.
பொறியியல் படிப்பில் இசிஇ (எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன்ஸ் இன்ஜினியரிங்) துறையில் மட்டும் தொலைதொடர்பு பற்றிய அறிவை பெறலாம். இதன் மூலம் மாணவர்கள் இசிஇயின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொறியியல் படிப்பில் மாணவர்கள் தேர்வு செய்யும் துறைகளில் முதல் இடத்தில் இசிஇ உள்ளது. ஆண்டுதோறும் 95 சதவீதத்துக்கும் அதிகமான இடங்கள் இப்பிரிவில் நிரம்பி விடுகின்றன என்பது கூடுதல் சிறப்பு. தமிழ்நாட்டில் தலைசிறந்து விளங்கும் சென்னை அண்ணா பல்கலைக் கழகம், மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, கோவை, சேலம், நெல்லை ஆகிய இடங்களில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரி உள்ளிட்ட 470க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுடன் முதல் தரவரிசையை இத்துறை வகிக்கிறது.
இசிஇ பிரிவு மாணவர்கள் Embedded System, VLSE design, Medical Electronics, OpticalCommunication, Communication System, Avionics, Network Engineering போன்ற ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த முதுகலை பொறியியல் படிப்புகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை பெறுகின்றனர். நிலையான மற்றும் வேகமான வளர்ச்சியை கொண்டிருக்கும் தொலைதொடர்பு துறை, அதிக அளவிலான தகவல் தொழில்நுட்பத்துறை வேலை வாய்ப்புகள், பொறியியல் கல்லூரி களில் அதிக சம்பளத்தில் ஆசிரியர் பணி, பல்வேறு ஆராய்ச்சி வாய்ப்பு கள் உள்ளதால் இசிஇ துறைக்கு என்றுமே பசுமையான எதிர்காலம் உள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook